Being Salt and Light in Zurich

Become a Christian

கிறிஸ்தவராக மாறுங்கள்

நீங்கள் கிறிஸ்துவோடு ஒப்பந்தம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம்.

நீண்ட தூர பயணம் ஒரு சிறிய படியில் ஆரம்பிக்கிறது என்று சொன்னது போல, நீங்கள் உங்கள் பயணத்தை தேவனோடு தொடங்கி உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

இரட்சிக்கப்படுதல் என்றல் என்ன ?

இரட்சிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சபையின் உபதேசமாக அல்லது பாரம்பரியத்திலிருந்து வருவதோ அல்ல, அது ஒரு தனி நபருக்கு கிடைக்கும் அனுபவம். உங்களுக்கு இரட்சிப்பைக் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் பாவியின் ஜெபத்தை ஜெபியுங்கள்.
முதலாவது நீங்கள் உங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவனை வேதனைப்படுத்தும் ஏதேனும் இருந்தால் அதை எழுதி, கீழ்கண்ட வசனங்களை படியுங்கள்

ரோமர் 3:23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கர்த்தருடைய மகிமையற்றவர்களானார்கள்.

ரோமர் 4:3 வேதவசனம் என்ன சொல்கிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது தேவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
அப்போ 3:19 ஆனபடியினாலே கார்தருடைய சந்திதானத்திலுருந்து இனப்பாறுதலின் காலங்கள் வரும் படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும் படிக்கும்

20. உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்ப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்ப குணப்படுங்கள். அப்படியென்றால் நீங்கள் இரண்டாவது படிக்கு தயாராகிவிட்டிர்கள்; அது என்னவென்றால் கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார். உங்கள் பாவத்துக்காக விலை கிரயம் செலுத்தி விட்டார். நீங்கள் மன்னிப்பு கேட்டால் அதை இலவசமாக தருவார். இதை வேதம் மிகவும் தெளிவாக கூறுகிறது . நாம் இப்போது இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு விட்டதால், நாம் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ரோமர் 5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே

ரோமர் 5:10 நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனனின் மரணத்தினாலே அவருடைனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட பின் அவரை நாம் அவருடைய ஜிவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே

உங்கள் பாவங்களை தேவனிடத்தில் வைத்துவிட்டு, அவருடைய அன்பையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு அவரை உங்கள் வாழ்க்கைக்கு வர அழைப்பு விடுங்கள்.

நீங்கள் அனுதினமும் தேவனை உங்கள் வாழ்க்கைக்குள் வர அழையுங்கள், அழைத்த பிறகு கீழே உள்ள இரட்சிப்பின் ஜெபத்தை ஜெபியுங்கள்.

ஆண்டவரே, நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லா பாவத்திலிருந்து என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை சொந்தமாக்கி, ஜிவபுஸ்தகத்தில் என் பெயரை எழுதுங்கள். இன்று முதல் நான் உங்கள் வேதத்தை வாசித்து அதன்படி கீழ்படிவேன். இயேசுவின் இரத்தத்தினால் நான் கழுவப்பட்டு, மன்னிக்கப்பட்டேன். என் பாவங்கள் கடலின் ஆழங்களிலே போடப்பட்டு இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை இப்பொழுது நான் தேவனுடைய பிள்ளையாகி இயேசுவை என் வாழ்க்கையின் தேவனாக்கிக் கொண்டேன்.

ஆமேன்

இப்போது உனக்கு ஒரு நிச்சயம் உண்டு நீங்கள் நித்தியத்தை தேவனோடு கழிப்பீர்கள்