ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
யாத்திராகமம்-4:31
நாம் படுகிற உபத்திரவத்தை கண்ணோக்கி பார்க்கிற ஒரு ஆண்டவர் உண்டு. அவர் ஜீவனுள்ளவர். வல்லமையுள்ளவர். பிரியமானவர்களே, இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் பார்வோனாலும், எகிப்தியர்களாலும், மிகவும் உபத்திரவப்பட்டார்கள். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அல்லது உபத்திரவத்திலிருந்து விடுதலை கொடுக்க முடியவில்லை. எனவே இஸ்ரவேல் புத்திரர் தேவனை நோக்கிப் பார்த்தார்கள். ஆண்டவர் அவர்களுடைய எல்லா உபத்திரவங்களையும் நீக்கி விடுதலை செய்தார். காரணம் என்ன? வேதம் சொல்கிறது, உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். சங்கீதம்-22:24
இன்று உங்களையும் உபத்திரவங்களில் நின்று விடுவிக்க அவர் உண்மையுள்ளவர் மட்டுமல்ல; வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். எனவே நீங்கள் விடுதலை பெற இஸ்ரவேல் புத்திரர் செய்தது போல தேவனை நோக்கிப் பாருங்கள். விடுதலை நிச்சயம்.
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்