Being Salt and Light in Zurich

அவர் உன்னை ஆதரிப்பார்

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
சங்கீதம்-55:22

இன்று அநேகர் ஆதரவற்ற நிலையில் கவனிப்பாரற்று இருக்கிறார்கள். பணம் சம்பாதித்து பிள்ளைகளை படிக்கவைத்து தங்களுக்கென்று சேர்த்து வைக்காமல் பிள்ளைகள் பிள்ளைகள் என்று அன்பு பாராட்டிய எத்தனையோ தகப்பன் தாய்மார் இன்று ஆதரவற்று அனாதை இல்லங்களில் கண்ணீரோடு வாழும் காட்சி வேதனைக்குரிய ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால் வாழ்விலும் தாழ்விலும் உன்னை கைவிடமாட்டேன் என்ற எத்தனையோ பேர் துரோகம் செய்து நம்பினவர்களை கைவிட்டு பிள்ளைகளையும் அனாதைகளாக்கிய கதைகள்தான் எத்தனை.

துன்பங்கள் வரும் போது தொல்லைகள் வரும்போதும் நாம் அன்பு பாராட்டினவர்கள் நம்மை விட்டு விலகி போகும்போது நமது உள்ளமானது வேதனையால் நிரம்புகிறது. நாம் நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் இயேசு உங்களை நேசிக்கிறார்; அவர் உங்களை ஆதரிப்பார்



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live