கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். சங்கீதம்-100:3
சங்கீதக்காரனாகிய தாவீது ஒரு மேய்ப்பன். எனவே ஒரு மேய்ப்பனானவன் எத்தன்மையுள்ளவன் என்பதை தாவீது தனது அனுபவங்கள் மூலம் அறிந்திருந்தான். ஒரு முறை, சவுல் முன்னதாக தனது சாட்சியை கூறினான். அதாவது, “ஒருமுறை ஒரு சிங்கமும், ஒருமுறை ஒரு கரடியும் வந்து எனது ஆட்டை கவ்விக்கொண்டது. உடனடியாக நான் அவைகளை மேற் கொண்டு அந்த மிருகங்களின் வாய்க்கு அவைகளை தப்புவித்தேன் ” என்றான்.
அதுமட்டுமல்ல, ஒரு மேய்ப்பனானவன் தன் மந்தைக்கு நல்ல மேச்சலை கொடுக்கிறான் என்பதை நன்கு அறிந்திருந்தபடியால் தான், சங்கீதம் 23 ஆம் அதிகாரத்தில், “கர்த்தர் என்மேய்பராக இருக்கிறார் என்றும் அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போய் விடுகிறார்” என்று சங்கீதம் பாடுகிறான்.
ஆம் பிரியமானவர்களே, நம்முடைய பிரதான மேய்ப்பனான இயேசுவிடம் நாம் நம்மை முற்றுமாக ஒப்புக் கொடுப்போமானால், அவர் நம்மை நடத்துவார். நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருப்போம். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments