களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். ஆகாய்-2:19
ஒரு கெம்பீர குரலோடு, ஆண்டவர் சொல்லும் வார்த்தையை கவனியுங்கள். நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன். அது யாருடைய குரல்? வானத்தையும், பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை பார்த்து சொல்கிறார், “நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்”
இதை வாசிக்கும் அருமை நண்பனே, நீங்கள் இந்த வார்த்தையை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், இன்று போய் நாளை வா என்று கூறும் ஆண்டவர் அல்ல, நம்முடைய தேவன். இப்பொழுதே, இன்றே, என் கரத்தின் வல்லமையை பார் என்று கூறி, அற்புதம் செய்பவர் நமதாண்டவர்!
தேவ பிள்ளையே, ஆசீர்வாதம் என்பது பணம் மட்டும்தான் என்று நினைப்போர் அநேகர் உண்டு. பணம் மட்டும் ஆசீர்வாதமல்ல! சரீர சுகம், படிப்பு, தொழில், குடும்ப சமாதானம் எல்லாம் ஆசீர்வாதம் தான்! இன்று இப்படிபட்ட ஆசீர்வாதங்களில் ஒன்று என் வாழ்வில் குறைவாக உள்ளது; அது நிறைவாக வேண்டும் என்று வாஞ்சிப்பீர்களேயானால், தயங்காதேயுங்கள். அப்பாவைப் பார்த்து, “இயேசப்பா என்னை ஆசீர்வதியுங்கள்” என்று, கண்களை மூடி கருத்தோடு சொல்லிப்பாருங்கள். ஆண்டவர் அற்புதம் செய்வார்! அதிசயங்களை காண்பீர்கள்! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments