நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா-9:12
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் என்கிற வாக்குறுதியை சொந்தமாக்கிக் கொண்டு, உற்சாகமாக எழுந்திருங்கள். என் பிள்ளையின் படிப்பு நாளுக்கு நாள் மங்கி போய்க் கொண்டிருக்கிறது; அநேக நஷ்டங்களை அடைந்து விட்டோம்; இதன் நிமித்தமாக சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனம் என்ன? செய்வதறியாது இருக்கிற உங்களோடு கர்த்தர் சொல்லும் வார்த்தை – இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறதல்லவா? யாருக்கு தருவார் என்ற உங்கள் கேள்வி நியாயமானதே! ஆம் பிரியமானவர்களே, நம்பிக்கையோடு அரணுக்கு திரும்புகிறவர்களுக்கே. இந்த அரண் எதை குறிக்கிறது? சங்கீதம் 31:2 இல் சங்கீதக்காரன் தாவீது சொல்வதை கவனியுங்கள். உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்
ஆம் நம்முடைய காத்தர் தான் நமக்கு பலத்த துருகம், அடைக்கலம் மற்றும் அரண். அது எத்தனை பெரிய ஆசீர்வாதம் பாருங்கள்! விடுதலை, பாதுகாப்பு, ஆசீவாதம் எல்லாம் அவருக்குள் அடங்கியிருக்கிறது. அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். செல்வம், கல்வி, வீரம் எல்லாம் அவரிடம் முழுமையாக இருக்கிறது. அதனால் தான் சாலமோன் ராஜா எனக்கு ஞானம் தாரும் என்று விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் அவன் கேளாத செல்வத்தையும் ஞானத்தையும் அளவில்லாமல் கொடுத்தார். பிள்ளைகளுக்கு ஞானம் தேவையா? ஒருவருக்கும் இல்லையென்று சொல்லாதவரும், பரிபூரணமாக கொடுக்கும் கர்த்தரிடத்தில் கேட்டால் கொடுப்பார். எனவே, நம்பிக்கையோடு அவரிடம் திரும்புங்கள். இரட்டிப்பான நன்மையைத் தருவார் ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments