நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்
யோவான்-14:18
ஒரு தகப்பனும் மகனுமாக ரயில் ஏறி போனார்களாம். போனவர்கள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்போடு, அந்த தாயார் புகையிரத நிலையத்தில் தினமும் அதிகாலையிலே வந்து அமர்ந்து, இரவு கடைசி புகையிரதம் வரும் வரை தரித்திருந்து, எனது கணவரும் மகனும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு வாழ்ந்து மரித்தார்களாம். ஆனால் அவர்கள் வரவில்லை.
ஆனால் இயேசு சொன்னார் நான் வருவேன் என்று; ஆம் பிரியமானவர்களே, சீக்கிரத்தில் வரப்போகிறார். அவர் வருமுன் சொல்லப்பட்ட அடையாளங்கள் எல்லாம் நிறைவேறிக்கொண்டு வருகிறது. இயேசு வருவதுமட்டுமல்ல, தம்முடைய பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போகப் போகிறார். நீங்கள் ஆயத்தமா? மாரநாதா வாரும் என்று சொல்வோம்.ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments