இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
எசேக்கியேல்-36:9
அருமையானவர்களே, தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லி கொடுக்கும் போது, அருகில் அமர்ந்து அன்போடு பாடங்களை விளக்கி கொடுப்பார்கள். அவர்களுக்கு விளங்காததை விளங்க வைப்பதோடு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அன்பாக பதிலை கூறி விளங்கவைப்பார்கள். தொடர்ந்து அவர்கள் எழுதும்போது பிழையாக எழுதுமிடத்தில் சரி செய்வார்கள்.
இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய ஒன்று என்னவென்றால், இந்த தாயின் கண்கள் பிள்ளையின்மேல் நோக்கமாக இருப்பது போல், நமது ஆண்டவர் தமது பிள்ளைகள் மேல் கண்களை வைத்து, இந்த நாளிலே இங்கே போ அல்லது போகவேண்டாம், இதை செய் அல்லது இதை செய்யாதே என்று உங்கள் மேல் தம்முடைய கண்களை பதியவைத்து, இந்த நான் முழுவதும் வழிநடத்துவாராக. ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்