நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
ஒரு முறை பேதுரு கடல் பிரயாணம் ஒன்றை மேற்கொண்டார். அது ஒரு இரவு வேளை. கும்மிருட்டு. அலைகளின் ஓசை. பயம் உள்ளத்தில் திகைத்துக் கொண்டிருக்கும் நேரம். இயேசு கடலின் மேல் நடந்து வந்தார். அதை கண்ட பேதுரு நானும் வருகிறேன் என்று, தண்ணீர்கள் மேல் நடக்க ஆரம்பித்தார். சற்று தூரம் நடந்தவுடன், பயந்துபோய், “ஆண்டவரே என்னை காப்பாற்றும்” என்று கதற ஆரம்பித்தார். உடனே இயேசு, தம் கரத்தை நீட்டி, பேதுருவை தூக்கி எடுத்தார்.
ஆம் பிரியமானவர்களே, இன்று அநேக பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள். முகம் கொடுக்க முடியவில்லையே, அமிழ்ந்து போகிறேனே, என்று கதறுவீர்களானால், இயேசு தம்முடைய ஆணிகள் கடாவப்பட்ட கரத்தை உங்களுக்கு நேராக நீட்டி, “பயப்படாதே மகனே, பயப்படாதே மகளே, இதோ நான் இருக்கிறேன். உன்னைக் கைவிடுவதுமில்லை”. என்னைப் பற்றி பிடித்துக்கொள் என்று நீட்டுகிறார். பிடித்துக் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம். ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments