அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா-30:17
இங்கே நாம் பார்க்கிறோம், விசாரிப்பற்று தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், உனக்கு நான் ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன். பிரியமானவர்களே, இதை வாசிக்கும் நீங்களும், புறக்கணிக்கப்பட்ட ஒரு நபராக இருக்கலாம். அநேகருடைய வார்த்தைகள், உங்கள் உள்ளத்தை பீறிப்போட்டிருக்கலாம். இந்த காயம் ஆறாதா? என்ற ஏக்கம் உங்களுக்குள் இருக்கலாம்.
ஒரு மனிதன், தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மேல் இரக்கமற்றவனாக, நன்றாக குடித்துவிட்டு வந்து அவர்களை அடிப்பான். வீட்டில் ஆகாரம் இல்லை. பிள்ளைகள் பாடசாலைக்கு போகமுடியாது. காரணம், சரியாக தூக்கம் இல்லை. ஆனால், இந்த தாயும் பிள்ளைகளும் தினமும் வேதனையை அனுபவித்த போதும், கர்த்தரை கைவிடவில்லை. ஆண்டவரே, எங்கள் அப்பாவை மாற்றமாட்டீரா? என்று தேவனிடத்தில் இரக்கத்துக்காக கெஞ்சுவார்கள். என்ன நடந்தது? ஒரு நாள், அவர் ஒரு வயல் பாதையில் வரும்போது, இரவு நன்றாக குடித்துவிட்டு, வீட்டுக்கு சென்று தன் கைவரிசையை காட்டவேண்டும் என்று பாடிக்கொண்டே வந்தார். இடையே பெரிய உருவம் கொண்ட பிசாசு, அவரை அடித்து அவர் கழுத்தை நெரித்தபோது, தன் மனைவி அடி வாங்கும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை அவர் ஞாபத்திற்கு வந்தது. அந்த வார்த்தை – இயேசுவின் இரத்தம். இயேசுவின் இரத்தம். நடந்தது என்ன? அவர் அதே வார்த்தையை உச்சரித்தபோது, பிசாசுகள் ஓடிவிட்டன. வீடுவந்த அவர், தன் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டார். நான் உங்களை காயப்படுத்தி, துன்பப்படுத்தினேன். இன்று அந்த வேதனையை உணர்ந்துக் கொண்டேன் என்றார்.
இதை வாசிக்கும் தேவ பிள்ளையே, அதே ஆண்டவர் உனக்கும் உதவி செய்வார். உன் கண்ணீரை காண்கிறார். உன் காயங்களை, நிச்சயம் ஆற்றுவார். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments