சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா-2:10
மனிதன் ஆண்டவரை விட்டு வாழ விரும்புகிறான். ஆனால், நம்முடைய அன்புள்ள ஆண்டவர் மனிதனோடு வாசம்பண்ண விரும்புகிறார். மனிதன் பாவம் மற்றும் துரோகம் செய்து, அவரை வெறுத்து, அவருக்கு விரோதமாக கோபமூட்டும் செயல்களை செய்தபோதும், அவருடைய அன்பை பாருங்கள்! “நான் உன் நடுவில் வாசம்பண்ணுவேன்” என்று உரிமையோடு சொல்வதைப்பாருங்கள்.
நம்முடைய தவறுகளை மனிதர்கள் காணும்போது, நம்மை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் தேவனோ, மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர். இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தில் இருந்து புறப்பட்ட நாள்முதல் அவருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். ஆனால் அந்த இஸ்ரவேல் ஜனத்தின் மத்தியில், “நான் உலாவி வாசம்பண்ணும்படி ஒரு வாசஸ்தலத்தை உண்டுபண்ணு” என்று மோசேக்கு கட்டளையிட்டார். அன்று, அவர்கள் மத்தியில் வாசம்பண்ண விரும்பிய தேவன், இன்று உங்கள் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று வாக்குப்பண்ணுகிறார்.
தயங்கவேண்டாம்! அவருக்கு விரோதமாக செய்த ஏந்த பாவமானாலும் சரி, என்னை மன்னியும் இயேசுவே என்று அறிக்கை செய்யுங்கள். உங்களை பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, அவர் உங்கள் நடுவில் வாசம்பண்ணுவார். அவர் நம்மோடு வாசம்பண்ணினால், வெற்றிமேல் வெற்றியே! தோல்வி இல்லையே! ஆமென். அல்லேலுயா
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments