இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக் கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். ஏசாயா-50:4
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, என் தாயார் காலையிலே என்னை எழுப்புவார்கள். என் தகப்பனார், இரவு எத்தனை மணிக்கு வந்தாலும், காலை 4.00 மணிக்கு எழும்பி ஜெபிக்க ஆரம்பிப்பார். நாங்களும் ஜெபிக்க உட்கார வேண்டும். ஆனால், இன்று இப்படிபட்ட நிலை குலைந்து போய் உள்ளது. காரணம் என்ன என்றால், என் தகப்பனார் கூறும் ஒரு பதில் காலைதோறும் தேவனை சந்திக்கலாம்.
பாருங்கள் நீதிமொழிகள்-8:17 என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். வாசித்துப் பாருங்கள் யாத்திராகமம் 34:2 விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். அங்கே என்ன நடக்கும்? முதலாம் வசனம் இவ்விதமாக கூறுகிறது – புதிய கற்பனையை நான் எழுதுவேன். நாம் தேவ சமூகத்தில் வந்து நிற்கும் போது, ஆண்டவரிடம் நம் தேவையனைத்தையும் கூற முடியும். காரணம் காலைதோறும் அவர் கிருபை புதிது. அத்தோடு மட்டுமல்ல, கல்விமானின் நாவைத் தருகிறார்; எப்படி பேச வேண்டும் எதை பேச வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்.
அநேகர் தேவையற்ற காரியங்களை பேசும்போது, வீண் சண்டைகள் பகைகள் ஏற்பட காரணம் – நாவானது கிருபையினால் நிறப்பப் படவில்லை. இதுதான், மனிதர்கள் அவர்களைப் பார்த்து மூடர்கள் என்று வசனிப்பதும், அவர்களை விட்டு விலகி நடப்பதற்கும் காரணம். ஆனால், விவேகியோ தன் நாவை காத்துக்கொள்ளும்போது எல்லோராலும் புகழப்படுவான். நாமும் மற்றவர்களால் புறக்கணிக்கப்படாதபடி, நாவை காத்துக் கொள்ள, கிருபையை காலையிலே பெற்றுக் கொள்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments