நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். சங்கீதம்-13:5
இன்று மனிதர்கள், சக மனிதர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வைத்தியர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். லேயாளைப் பாருங்கள்! யாக்கோபு தன் மேல் அன்பு வைப்பார், என்று மிகவும் நம்பினாள். அனால், நம்பின கணவனோ எதிர்பார்த்த அன்பை செலுத்தவில்லை.
ஒரு முறை, தகப்பன் ஒருவர், தன் மகளுடைய திருமணத்திற்காக காத்திருந்த வேளை, அவருக்கு தெரிந்த ஒருவர் அவரிடம், “உன் பிள்ளையின் திருமணத்தை என் பிள்ளையின் திருமணத்தைப் போல நடத்தி முடிப்பேன்” என்றார். மிகவும் எதிர்பார்ப்போடு, திருமண ஒழுங்குகளை எல்லாம் செய்ய ஆயத்தமானார். அநேகருக்கு தனது மகளின் திருமணத்தை குறித்து அறிவித்திருந்தார். நடந்தது என்ன? நம்பின மனிதன் கையை விரித்து விட்டான். வீடு திரும்பிய தகப்பன் பெருமூச்சோடு அமர்ந்தார். எழுந்திருக்கவில்லை!
பிரியமானவர்களே, இதையெல்லாம் அறிந்த தாவீது சொல்கிறதை கவனியுங்கள் “உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்” என்று கூறுகிறார். சகோதரி சாராள் நவரோஜி ஒரு பாடலை எழுதினார்கள்; அதுதான் – தம் கிருபை பெரிதல்லோ. இவர்களிடம் ஒரு முறை ஒரு நேர்காணல் எடுத்தார்கள். அப்பொழுது அவர்களிடம் “எதற்கெல்லாம் இந்த கிருபை தேவை? “ என்று கேட்டபோது, அவர்கள் கூறிய பதில் – “ஜெபிக்க, விசுவாசிக்க, வேதம்வாசிக்க. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஒரு ஜெயஜீவியம் ஜீவிக்க கிருபை தேவை” என்று சொன்னார்கள்.
ஆம் பிரியமானவர்களே, நாமும் அந்த விலகாத கிருபையின் மேல்நம்பிக்கை வைப்போம். ஜெயஜீவியம் ஜீவிப்போம் ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments