அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண் காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். என்று கர்த்தர் சொல்லுகிறார். செப்பனியா-3:20
யாருடைய புகழும் கீர்த்தியும் பெருகும், பிரியமானவர்களே? வசதி படைத்தவர்கள் அல்லது வெற்றி பெற்றவர்கள். உதாரணமாக சொல்வேனேயானால், ஓட்டப்போட்டியிலோ அல்லது குத்துச்சண்டை போட்டியிலோ பங்கு கொண்டு வெற்றி பெற்ற ஒருவரை, பத்திரிகையாளர்களோ தொலைகாட்சி செய்தியாளர்களோ குறிப்பிட்ட நபரின் படத்தை பல கோணங்களிலும் இருந்து பிடித்து அவரை பேட்டி காண்பார்கள். அடுத்த நாள், செய்தி தாள்களில் பிரசுரிக்கப்படும் போதும், தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும்போதும், அவருக்கு பேரும் புகழும் உண்டாகும்.
ஆனால் நம்முடைய ஆண்டவரோ, புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை கீர்த்தியும் புகழ்ச்சியும் உள்ளவர்களாக மாற்றுகிறார். பாருங்கள், அன்னாள் ஆண்டவரை எப்படி பாடுகிறாள் – “நீர் சிறியவனை குப்பையில் இருந்து எடுத்து ராஜாக்களோடு அமரச்செய்கிறீர்” என்று. தாவீது தகப்பனாலும், சகோதரர்களாலும், புறக்கணிக்கப் பட்டவனாக வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனையல்லவா ஆள்விட்டனுப்பி ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்!
ஒருவேளை, நீங்களும் கணவனால், மனைவியால், பிள்ளைகளால், பெற்றோரால், உறவுகளால் அல்லது நண்பர்களால் புறக்கணிக்கப் பட்டவர்களாக காணப்படலாம். கலங்கவேண்டாம்! இயேசு உங்களை கீர்த்தியும் புகழ்சியுமாக வைப்பார். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments