நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்
யோவான்-14:18
ஒருமுறை, ஒரு அம்மா நான் அநாதை, அநாதை, எனக்கு யாரும் இல்லை, யாரும் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வழியே வந்த ஒருவராகிலும், அந்த தாயை அமைதிபடுத்தவோ ஆறுதல் படுத்தவோ முன் வரவில்லை. இன்று இந்த உலகத்தில் அநேகருடைய புலம்பல் இதுவே.
ஆனால் பிரியமானவர்களே உங்களை ஆறுதல் படுத்தவும் உங்களுக்கு அற்புதம் செய்யவும் ஒருவர் உண்டு. அவர்தான் நமதருமை ஆண்டவர் இயேசு. பாருங்கள் இயேசு இவ்வுலகத்தை விட்டு விண்ணகம் செல்லப்போகிறேன் என்றவுடன், சீஷர்களின் இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. காரணம் இனி விசாரிப்பார் அற்று அநாதைகளை போல இருப்போம் என்று மனம் துவண்டு போனார்கள். அந்த வேளையில் இயேசு அவர்களைப் பார்த்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்” என்று சொல்லி அவர்களை திடப்படுத்தினார். அதே இயேசு இன்றும் ஜீவிக்கிறார். கலங்க வேண்டாம். உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார்.
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments