நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிலிப்பியர்-3:20
இன்று மனிதன் பூமிக்குரிய ஆசீர்வாதத்தையே தேடுகிறான். அவன் நினைவெல்லாம் இந்த பூமிதான்! தன்னுடைய நிரந்திர சொந்தமான இடம் என்று நினைக்கிறான்.
பிரியமானவர்களே இது நமக்கு ஒரு தற்காலிகமான இடம். நம்முடைய சொந்த பூமி, வீடு, எல்லாமே பரலோகம்தான். பாருங்கள், நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் இந்த பூமி தனக்கு சொந்தமானதல்ல என்று எண்ணினபடியால், தன்னை ஒரு அந்நியனாகவும், பரதேசியாகவும் எண்ணி, தான் சுதந்தரிக்கப் போகிற பரம வாசஸ்தலத்தை வாஞ்சையோடு அதை தூரத்தில் கண்டு, அணைத்துக்கொண்டார் என்று பார்க்கிறோம். காரணம் அங்கே பசி இல்லை! வியாதி இல்லை! கண்ணீர் இல்லை! அங்கே சந்தோஷமும், சமாதானமும், மகிழ்ச்சியும், துதியும், ஆரவாரமும் உண்டு.
எனவே நம்முடைய வாஞ்சையும் பரலோகமாக இருக்கட்டும். எனவே வாஞ்சிப்போம். அதற்காக தயாராவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments