நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை புலம்பல்-3:22
நேற்றிருந்தவர்கள் எத்தனையோ பேர் இன்றில்லை! சிலர் வாகனவிபத்துகளுக்கும், பட்டயத்துக்கும், தற்கொலைக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும், இன்னும் சிலர் இயற்கையாகவே இவ்வுலகத்தை விட்டும் பிரிந்து போய்விட்டார்கள். ஆனால், உங்களையும் என்னையும் இந்த நாளை காணச் செய்தது நம்முடைய ஆண்டவரின் கிருபை அல்லவா?
கடந்த நாட்களை கண்முன் சற்று நிறுத்திப் பாருங்கள். எத்தனை விபத்துக்கள் நேரிட இருந்தது? வேலை செய்யும் இடங்களிலும், வாகன போக்குவரத்தின் போதும் நம்மை கண்மணிபோல காத்தது கர்த்தருடைய கிருபையே! இதை நினைத்து தந்தை பெர்க்மான்ஸோடு சேர்ந்து பாடுங்கள் நன்றியுள்ள இதயத்தோடு. நன்றியை துதியாய், காணிக்கையாய் செலுத்துங்கள். ஆசீர்வாதம் பின்தொடரும்! அனைத்து துன்பங்களும் நீங்கும்! ஆமென்
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால்புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறை தோறும்துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments