இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார். லூக்கா-13:16
வேதத்தில் இயேசு செய்த அநேக அற்புதங்களை நாம் வாசித்திருக்கிறோம். இங்கே, லூக்கா பதின்மூன்றாம் அதிகாரத்தில், ஒரு தாயைக் குறித்து பார்க்கிறோம். அவள் எவ்வளவேனும் நிமிர கூடாத கூனியாக இருந்தாள். ஆனால் தேவாலயத்திற்கு இயேசு வந்த போது, அவளை ஒரே நிமிடத்தில் நிமிர்ந்திருக்கும்படி செய்தார்.
இன்று இதை வாசிக்கும் உங்கள் வாழ்விலும், நிமிர கூடாதபடி வியாதி, கடன் தொல்லை, பிள்ளை நிமித்தமாக அல்லது வேறு ஏதோ காரணங்கள் நிமித்தமாக நிமிர கூடாதபடி இருக்கிறீர்களா? இயேசு உங்களை விடுதலை செய்ய, இப்பொழுது உங்கள் அருகாமையில் நிற்கிறார்.
ஒரு நாள், சகோதரி ஒருவர் சபைக்கு வந்திருந்தார். வீட்டில் சமைப்பது இல்லை; வீட்டை சுத்தம் செய்வதில்லை; பிள்ளைகளை கவனிப்பது இல்லை. எத்தனையோ வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று முயற்சித்துப் பார்த்தார்கள். ஒன்றிலும் பலன் கிட்டவில்லை! கடைசியாக எங்கள் சபைக்கு வந்தார்கள். ஜெபிக்க தொடங்கினால், ஆட ஆரம்பிப்பார்கள். ஒருவராலும், அவர்களை அடக்க கூடாமல் இருந்தது. ஆனால் ஒரு நாள், ஒரு உபவாச கூட்டத்தில், அவர்களுக்காக சபையார் யாவரும் ஒருமனப்பட்டு ஜெபித்தோம். அன்று அவர்களுக்கு பிசாசு கட்டிவைத்திருந்த கட்டில் இருந்து விடுதலை கிடைத்தது! அடுத்தநாள் ஆராதனையில் சாட்சி சொன்னார்கள். அல்லேலுயா! கர்த்தருக்கே மகிமை!
இன்று, பிசாசு உங்களையும் பாவ கட்டிலும், வியாதின் கட்டிலும் கட்டி வைத்திருக்கிறானா? கட்டப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இயேசுவிடம் வாருங்கள்! இலவசமாக விடுதலையை பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments