நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். கொலோசெயர்-3:1
இரண்டாம் வசனம் இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது – அதாவது, பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். அந்த பூமிக்குரிய செல்வம் படிப்பு, வீண்பெருமை, புகழ்சி, பகை. இவையாவும் பூமிக்குரியவைகளே. பரலோகத்துக்குரியவைகளோ, சமாதானம் சந்தோஷம்.
அப்படியானால், இவற்றை நாம் எங்கேயிருந்து பெற்றுக் கொள்ள முடியும்? கல்வாரி நாதர் இயேசுவிடம் இருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இயேசுவை பாருங்கள். ஏனெனில் பூமியிலுள்ளவைகள் எல்லாம் ஒழிந்து போகும்.
எனவே நித்தியமான மேலானவைகளைத் தேடுங்கள். அனுதினமும் வேதம் வாசித்து, ஜெபித்து, பரிசுத்தத்தோடு மேலானவைகளை தேடுவோம். ஒரு நாள், வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவோடு சதாகாலமும் நாமும் இருப்போம். அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments