இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களா யிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்
மத்தேயு-14:14
இயேசு ஜனங்களைக் கண்டு மனதுருகி, வியாதியாய் இருந்தவர்களை சொஸ்தமாக்கினார் என்று வாசிக்கிறோம். பிரியமானவர்களே, இன்று அநேகர் வியாதியினால் வேதனைப்படும் போது, அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்கிறார்கள். மருந்து எடுத்த போதும், சுகப்படுத்தமுடியாமல் வேதனையோடு மருத்துவமனையும் வீடுமாகவும், மருந்தும் கையுமாக இருப்போர் எத்தனை பேர்!
இவற்றை பிழை என்று எழுதவில்லை. அதற்கு தடையுமில்லை. நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வாஞ்சிப்பதெல்லாம் ஒன்று. உங்களுக்காகவும், எனக்காகவும், சிலுவையில் மரித்த இயேசு, நம்முடைய வியாதிகளை சுமந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறபடியால், ஒரு முறை விசுவாசத்தோடு இயேசுவிடம் “ஆண்டவரே என்னை சுகப்படுத்த உம்மால் முடியும். உமது தழும்புகளால் நான் சுகமாகிறேன்” என்று சொல்லிப்பாருங்கள். காரணம் அவர் மனதுருகி சொஸ்தமாக்குவார். ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்