நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. யோபு-1:10
ஊத்ஸ் தேசத்திலே, யோபு பெரிய செல்வந்தனாக வாழ்ந்த ஒரு மனிதன் என்று வேதத்தில் பார்க்கிறோம். யோபுவை செல்வந்தனாக உயர்த்தியது மட்டுமல்ல, அவன் சம்பத்தை வேலியடைத்து பாதுகாத்ததும் தேவன் என்பதை, சாத்தான் நன்றாக அறிந்திருந்தான். எனவேதான் சாத்தான் தேவனிடத்தில், “நீர் அவனை வேலியடைத்து பாதுகாக்கிறீர் ” என்று முறையிடுவதை பார்க்கிறோம்.
இதை வாசிக்கும் அருமை நண்பனே, உங்களையும், உங்களது பிள்ளைகளையும், உயர்த்துவதும் பாதுகாப்பதும் நம்முடைய ஆண்டவர் ஒருவரே. எனவே பயப்படவேண்டாம்!
நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும், நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
எனவே வாக்குத்தத்தங்களை பிடித்துக் கொண்டு, ஜெபியுங்கள்! விசுவாசியுங்கள்! ஜெயம் உங்களுடையதே. ஆமென். அல்லேலுயா
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments