Site icon Bethel Tamil Christian Church Switzerland

நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்

sad

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.    சங்கீதம்-51:17

எந்த ஒரு பொருள் உடைந்து போனலும், அதை ஒட்ட முடியும். ஆனால், இதயம் உடைந்து போனால், அதை எந்த வகையிலும் ஒட்ட முடியாது. இன்று உங்கள் இதயமானது, வியாதியினாலோ அல்லது தேவைகளினாலோ, தோல்விகள் மற்றும் பிரச்சனைகளாலோ, ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தமாக உங்கள் உள்ளமானது, நொறுங்கிக் காணப்படலாம்.

ஒரு முறை, ஒரு வாலிபத் தம்பி முதல் முறையாக ஆலய ஆராதனைக்கு வந்திருந்தான். அவனை ஆராதனைக்கு அழைத்துவர பட்ட பிரயாசத்தை கர்த்தர் ஒருவர்தான் அறிவார். ஏதோ ஒருவாறு வந்தான். ஆராதனையில் கடைசியாக, தேவைகள் இருப்பவர்கள் உங்கள் தேவைகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வியாதியோ, படிப்போ அல்லது எதுவாயிருப்பினும், கர்த்தர் சந்திக்க வல்லவராக இருக்கிறார். விசுவாசத்தோடு ஜெபிப்போம் என்று கூறி ஜெபித்தோம். எனக்கொன்றும் தெரியாது. மறுநாள் மாலை, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாராக இருக்கலாம் என்று நினைத்தபோது, அந்த குறிப்பிட்ட தம்பி சொன்னார் “அண்ணன் ஒரு அற்புதம் நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நேற்று ஆராதனையின் கடைசி ஜெபத்தில், தேவைகளுக்காக ஜெபித்தபோது, என் தாய் விடுதலையாக வேண்டும் என்று ஜெபித்தேன். இன்று காலை, அதாவது திங்கள் காலை, விடுதலை பெற்றுக்கொண்டார்கள் ” என்றார். தொடர்ந்து சம்பவத்தை விபரிக்க தொடங்கினார். அதாவது, வெளிநாடு வரவிருந்த தாயை, சிங்கப்பூர் விமானநிலையத்தில் கைது செய்து, விளக்கமறியலில் கடந்த இரண்டு கிழமையாக வைத்திருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல், என் இருதயம் நொறுங்கிப் போய் இங்கு வந்தேன். கடைசியாக ஜெபிக்கும்போது ஜெபித்தேன். ஆண்டவர் என் தாயை விடுதலை செய்தார் என்று கூறினார்.

ஆம் பிரியமானவர்களே, அதே ஆண்டவர் உங்கள் நொறுங்குண்ட இருதயத்தை பார்க்கிறார். விசுவாசியுங்கள்! அற்புதம் நிச்சயம்!  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version