ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன் சங்கீதம்-91:15
நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து கனப்படுத்துவேன். இது தேவனுடைய வார்த்தை. இன்று அநேகர், தேவனுடைய வார்த்தையை வாசிப்பது உண்டு. மனனம் செய்வது உண்டு. சிலர், கதை புத்தகம் வாசிப்பது போல வாசிப்பார்கள். சிலர், கடமைக்காக வாசிக்க வேண்டுமே என்று வாசிப்பார்கள். ஒரு சிலரே, தேவ வார்த்தையை தங்கள் வாழ்க்கையில் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் இரவு கடும் மழை பொழிந்தது. எனது தகப்பனாரும், இளைய சகோதரனும், கட்டிலில் படுத்திருந்தார்கள். எங்கள் வீடு மூங்கிலால் பிணைக்கப்பட்ட, மண் சுவர் கொண்ட வீடு. மழை நின்றபாடில்லை. மழைச்சாரல் சற்று எனது தகப்பனார் முகத்தில் விழ, அவர் என் தம்பியைப் பார்த்து, “மகனே மற்றப்பக்கம் திரும்பி தலையை வைத்து படுப்போம்” என்று இருவரும் எழவும், தண்ணீரைத் தேக்கி வைத்திருந்த சுவரானது உடைத்துக்கொண்டு மண்ணை கக்கவும் சரியாக இருந்தது. ஒரு கணம் தாமதித்திருந்தால், இருவருடைய முகத்தையும் மண்மூடியிருக்கும்.
அந்த ஆபத்திலிருந்து அவர்களைத் தப்புவித்த அதே தேவன், இன்று உங்களையும், பிள்ளைகளையும், குடும்பத்தையும், தப்புவிக்க வல்லவராக இருக்கிறார். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments