கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர் சங்கீதம்-92:4
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
என்ற பாடலை ஆராதனையில் ஆனந்தமாக பாடுகிறோமே, உண்மையிலேயே கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக களிகூற முடியுமா?
ஒரு முறை கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவருக்கு, பெயர் தெரியாத யாரோ ஒருவர் மொட்டை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவிட்டார். இது ஒன்றும் புதினமானது அல்ல. சிலரை ஆண்டவர் இந்த உலகத்தில் படைத்து வைத்திருப்பதன் நோக்கமே அதற்காகவோ தெரியவில்லை! பாருங்கள் சில விசப்பூச்சிகள் படைக்கப்பட்டிருக்கிறது. அவை மனிதருக்குத் தீங்கு விளைவிப்பதற்காக என்பது போல, சில மனிதரும் மற்றவர்களை துன்பப்படுத்தி வேதனை படுத்தாவிட்டால் அவர்களுக்கு நித்திரையே வராது. சரி அவர்களை விட்டுவிட்டு நம்முடைய தியான பகுதிக்குப் போவோம். குறித்த ஊழியருக்கு கடிதம் கிடைத்த உடன், சொல்லொன்னா துக்கமும் வேதனையும் அடைந்தார். காரணம் முற்றிலும் பொய்யான தகவல்கள். அவர் ஆண்டவரை நோக்கிப் பார்த்தார். ஆண்டவர் சொன்னாராம், “பாடி மகிழ்ந்து களிகூறு “ என்று. எப்படி முடியும்? ஆனால், அவர் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து துதித்துப் பாடினாராம். நடந்தது என்ன? சில மாதங்கள் கழிந்தபின், ஒருவர் அவரைத் தேடி வந்தார். பாஸ்டர், என்னை மன்னித்து விடுங்கள் என்றாராம்
இதை வாசிக்கும் அருமை நண்பனே, உங்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட நிலை காணப்படுமாயின், கலங்காமல் கர்த்தருக்குள் ஆடி பாடி மகிழ்ந்து களிகூருங்கள். தேவசமாதானம் முதலில் உங்களை ஆட்கொள்ளும். பின்பு உண்மை வெளிப்படும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments