என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது சங்கீதம்-63:8
சங்கீதக் காரனாகிய தாவீது சொல்வதை கவனித்துப்பாருங்கள். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; காரணம் என்ன? எத்தனையோ ஆபத்துக்கள் வந்த போதும் தேவன் எல்லா ஆபத்துகளிலும் இருந்து தாவீதை தப்புவித்தார். அவருடைய வலதுகரம் அவனைத் தாங்கிற்று.
பிரியமான தேவபிள்ளையே, நான் ஒரு முறை அதிகாலை 4 மணிக்கு வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்த போது பனி கொட்டியிருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது. கும் இருட்டு. ஒரு ஓரமான வழியாகப் போய்க் கொண்டிருக்கும் போது, இருட்டின் காரணமாக அறியாமல் பனிக்கட்டியின்மீது காலை வைத்துவிட்டதனால் சறுக்கி விழுந்து விட்டேன். தலையில் அடிபட்டதனால் சற்று மயக்க நிலையடைந்துவிட்டேன். பனியோ தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் எழுந்துவிட்டேன். ஒரு வேளை அப்படியே படுத்திருப்பேனேயானால், குறைந்தது காலை ஐந்தரை அல்லது ஆறு மணிக்குத்தான் யாராகிலும் என்னைக் கண்டிருப்பார்கள்.
ஆனால், தாயிலும் மேலான அன்பு வைத்த என் ஆண்டவர் தமது வலது கரத்தினால் தாங்கிய படியால், இன்று உயிரோடு இருப்பதும் இந்த பதிவை பதிவிடுவதும் அவரின் கிருபையே! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments