செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன் சங்கீதம்-31:12
ஒரு போதகர் கூறிய சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் நினைத்தாராம் என் மீது விசுவாசிகள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்; தொலைபேசியில் அழைத்தால் போதும், உடனே உதவிகள் கிடைக்கும். எத்தனை லட்சங்களானாலும் பெறமுடியும் என்று நம்பினாராம். உண்மையாகவே ஒரு நாள், அவருக்கு ஒரு பெரிய தேவை ஏற்பட்டது. அப்பொழுது அவர், அநேகருக்கு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு உதவியை நாடினார். அப்பொழுதுதான் அவருக்குப் புரிந்தது. எல்லோராலும் கைவிடப்பட்டேனே என்று நினைத்துப் புலம்ப ஆரம்பித்தார். மனிதர்கள் மேல் தான் வைத்திருந்த நம்பிக்கையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். உணரவும் ஆரம்பித்தார். நான் என் தேவனை மறந்து அவரிடம் உதவிக்கு கரம் நீட்டாமல், மனிதரிடம் எதிர்பார்த்தது எவ்வளவு மடமை என உணர்ந்தார்.
இன்று உங்கள் வாழ்விலும், மற்றவர்கள் நான் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள். உடைந்த பாத்திரத்தைப்போல இருக்கிறேன் என்று கூறுவீர்களானால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்களை தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று வாக்குறுதி பண்ணின தேவன் உயிரோடு இருக்கிறார். அவரை விட்டு விடாதிருங்கள். அவர் உங்களை மறக்கவும் மாட்டார் கைவிடவும் மாட்டார். தேற்றவாளனாக தேற்றிக் கொண்டே இருப்பார். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments