அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் IIதீமோத்தேயு-1:12
அப்போஸ்தலனாகிய பவுல் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் என்று தைரியத்தோடு கூறுவதை பாருங்கள். இன்று அநேகர் தான் யாரை விசுவாசித்திருக்கிறேன் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எப்படி என்றால், ஒரு பிரச்சனை வரும்போது அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை என்ன தெரியுமா? கடவுளாவது கத்திரிக்காயாவது.
இதை வாசிக்கும் அருமை நண்பனே, நீங்கள் விசுவாசித்திருக்கிறவரை யார் என்று அறிந்திருக்கிறீர்கள். அவர் அன்புள்ளவர், வல்லமையுள்ளவர், இரக்கம் உள்ளவர், நீதியுள்ளவர், யுத்தத்தில் வல்லவர், தேவைகளைச் சந்திப்பவர். அவரால் கூடாதது ஒன்றுமில்லை, எல்லாமே அவரால் ஆகும் என்று விசுவாசித்திருக்கிறீர்களா? அல்லது அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று விசுவாசித்திருக்கிறீர்களா?
பிரியமானவர்களே, ஒரு ஏழை வாலிபப் பெண் திருமண வயதை எட்டியும் திருமணமாகாத நிலையில் காணப்பட்டாள். காரணம் சீதனம் கொடுக்கவோ திருமண செலவைச் செய்யவோ அவளிடத்தில் பணம் இல்லை. அநேகர் இரக்கப்பட்டு ஜெபித்தார்கள். சபையில் உள்ளத் தாயார் ஒருவருக்கு, ஆண்டவர் சொப்பனம் மூலமாக சில காரியங்களை வெளிப்படுத்தினார். அவளுக்கு ஆஸ்திரேலியா மாப்பிள்ளை ஒருவர் பெண் கேட்டு வந்து, திருமணச் செலவைத் தானே பொறுப்பேற்பதாகவும், எப்படிப்பட்ட மதிய விருந்து, எப்படிப்பட்ட திருமண அழைப்பிதழ் என எல்லாவற்றையும் காட்டினார். அந்த தாயார் அப்பெண்ணிடம் எல்லாவற்றையும் கூறினார்கள். அந்த பெண் அதை அப்படியே விசுவாசித்தாள். நடந்தது என்ன தெரியுமா? ஆண்டவர் சொப்பனத்தில் எதை எல்லாம் வெளிப்படுத்தினாரோ, ஒன்றும் தவறாமல் எல்லாவற்றையும் அப்படியே நிறைவேற்றினார்.
அந்த தேவன் இன்றும் இருக்கிறார். அவரை சரியாக அறிந்திருப்பீர்களானால், இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அற்புதம் நிச்சயம் நடக்கும். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments