நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம்-145:16
ஆண்டவராகிய இயேசு, பறவைகளையும் காட்டு புஷ்பங்களையும் கவனித்துப்பாருங்கள். பரம பிதா பிழைப்பூட்டுகிறார் என்று கூறியதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். பிரியமான தேவ பிள்ளைகளே, பக்தன் யோபு “கூப்பிடுகிற காகக் குஞ்சுகளுக்கு அவர் ஆகாரம் கொடுக்கிறார்” என்று கூறுவதைக் காண்கிறோம். இயேசு இவ்விதமாகக் கூறினார் “ பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது உங்கள் பரமபிதா அதிலும் விஷேசித்தவைகளை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா” என்றார்.
ஆம் பிரியமானவர்களே, இது உண்மையிலும் உண்மை. இதை நான் நூற்றுக்கு நூறு விசுவாசிக்கிறேன். எங்கள் சபையின் தலைமை போதகருடைய கடைசி மகன், ஒரு சகோதரனிடத்தில் இறைச்சி சாப்பிட வேண்டும் என்று கேட்டாராம். இது சபையின் ஆரம்பக் கால கட்ட நிகழ்வு. கர்த்தர் ஆகாரம் கொடுத்தால் புசிப்போம், இல்லை பட்டினியோடு இருந்தாலும் தேவனைத் துதிப்போம் என்பதுதான் அவர்கள் நிலை. அது அப்படிப்பட்ட காலம். இறைச்சி கேட்ட அவருடைய மகனுக்கு அப்பொழுது மூன்று வயது. விசுவாசம் என்றால் என்ன என்று தெரியாத வயது. அந்த நேரத்தில் அவரை தூக்கிக் கொண்டிருந்த சகோதரன் சொன்னாராம் “தம்பி இயேசப்பாவிடம் கேள். அவர் தருவார்” என்று கூறினாராம். அவ்வார்த்தைகளை விசுவாசித்து இயேசப்பா எனக்கு இறைச்சி வேண்டும் என்று ஜெபித்தார். அன்று மாலை ஒரு அம்மா இறைச்சி சமைத்துக் கொண்டு விசுவாச வீட்டுக்கு வந்தார்களாம்.
வாஞ்சைகளை திருப்தியாக்கும் தேவன் அன்று அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்தது உண்மை என்றால் இன்று உங்களுக்கும் பதில் கொடுப்பது உண்மை ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments