நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம் பிரசங்கி-5:5
இன்று தேவைகள் ஏற்படும் போதும் வியாதிகள் வரும்போதும் ஆண்டவரிடத்தில் பொருத்தனை செய்து தேவையைப் பெற்றுக் கொள்கிறோம். தேவை முடிந்ததும் தேவனும் முடிந்தது என்பது அநேகருடைய வாழ்வில் உண்மையான ஒன்று.
பாருங்கள் பத்து குஷ்டரோகிகள் இயேசுவிடம் வந்தார்கள். பத்து பேரும் சுகம் பெற்றார்கள். ஒன்பது பேர் எங்கே போனார்கள் என்று தெரியாது. ஒருவன் மட்டும் இயேசுவிடம் வந்து தன்னை காண்பித்தான். இன்று இந்த ஒருவனைப்போல குணாதிசயம் உள்ளவர்கள் எத்தனை பேர்? பிள்ளை பரீட்சையில் சித்தி பெற்றால் இதை செய்வேன் என்று பொருத்தனை. அது போல வேலை கிடைத்தால் அல்லது சுகம் கிடைத்தால் இதை செய்வேன் என்று பொருத்தனை. ஆனால் எல்லாம் கிடைத்தவுடன் பொருத்தனையை மறந்து விடுகிறார்கள்.
ஒரு முறை ஒரு சிறுவன் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டான். உடனே ஆண்டவரே இதிலிருந்து என்னை விடுவியும்; நான் உம்முடைய ஆலயத்திற்கு ஒரு மாடு கொண்டு வந்து தருவேன் என்று பொருத்தனை செய்தான். கர்த்தர் அவனை விடுவித்தார். தனது தகப்பனாரிடம் நடந்த யாவற்றையும் கூறி பொருத்தனைக்கு ஒரு மாடு தாருங்கள் என்று கேட்டான். அதற்கு தகப்பன், “மாடு எதற்கு? ஒரு ஆடு கொடுத்தால் போதும் ” என்றார். சரி ஆட்டைத் தாருங்கள் என்றான் மகன். அதற்கு தகப்பன் “கடவுள் என்ன ஆட்டையும் மாட்டையுமா எதிர்பார்க்கிறார். அவர் வந்து ஆட்டையும் மாட்டையும் கொண்டா போகப் போகிறார்? கொஞ்சம் கச்சான் கடலை கொண்டுபோய் விசுவாச வீட்டிற்குக் கொடு ” என்றாராம். சரி என்று வாங்கி கொண்டுபோன சிறுவன், வழியிலேயே சாப்பிட்டுவிட்டு கோதை மட்டும் இருந்தவர்களிடம் கொடுத்தானாம்.
நம்மில் எத்தனை பேர் இதைப்போல இருக்கிறோம் என்று சிந்திப்போம். செய்த பொருத்தனையை நிறைவேற்றுவோம். ஆமென். உங்கள் நினைவிற்கு
நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.சங்கீதம்-50:14-15
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments