Being Salt and Light in Zurich

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.   எண்ணாகமம்-23:23

இன்று அநேக தேவ பிள்ளைகள் பயப்படும் காரியம் – மந்திரம். எனக்கு விரோதமாக, என் பிள்ளைகளுக்கு விரோதமாக, குடும்பத்திற்கு விரோதமாக மந்திரம் செய்திருக்கிறார்கள். எனவே பிள்ளை படிக்கமுடியாமல் தவிக்கிறான். குடும்பத்துக்கு விரோதமாக யாரோ ஒருவர் மந்திரம் செய்துவிட்டார்கள் என்று புலம்புவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஆண்டவர், “உனக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை” என்று கூறுகிறாரே. இது எதிர்வினையாக இருக்கிறதே. ஆம் பிரியமானவர்களே.

சென்னையில் எலிசபெத் என்ற இளம் பெண் ஒருவள் இருந்தாள். அவள் மீது ஒரு வாலிபனுக்கு விருப்பம் உண்டாக, அவன் தொட்டண்ணா என்ற மந்திரவாதியை நாடினான். மந்திரவாதி அந்த வாலிபனைப் பார்த்து “எலிசபெத் மிதித்த மண்ணை கொண்டுவா” என்றவுடன், அவனும் கொண்டுவந்து கொடுத்தான். மந்திரவாதி பணத்தைப் பெற்றுக் கொண்டு, “பார் நாளை இந்த நேரத்தில் அவள் உன் பின்னாக வருவாள்” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, மந்திரம் செய்ய ஆரம்பித்தார். முதலாவதாக ஒன்றை அனுப்பினார். அது முடியாது என்று திரும்பி வந்துவிட்டது. இரண்டாவதாக ஒன்றை அனுப்பினார். அதுவும் திரும்பி வந்துவிட்டது. மூன்றாவதாக, வலிமை படைத்த ஒன்றை அனுப்பினார். அது திரும்பி வந்து தொட்டண்ணாவிடம் “அவளைச் சுற்றி நெருப்பு எரிகிறது; அவளை அணுகமுடியாது” என்றது. இல்லை மறுபடியும் போ என்று அனுப்பினார். அது திரும்பி வந்த வேகத்தில் தொட்டண்ணாவை கீழே தள்ளி, “என்னை இன்னும் ஒரு முறை அனுப்பினால், உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றது. மந்திரவாதம் பக்கத்திலே போகமுடியாமல் போனது மட்டுமன்றி, மந்திரவாதி தொட்டண்ணா இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வழிவகுத்தது.

அப்படியானால் விசுவாசியுங்கள். உங்களுக்கு விரோதமாக யாரும் மந்திரம் செய்யமுடியாது! சவால் விடுங்கள்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *