அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும் போதே பலமுள்ளவனா யிருக்கிறேன் IIகொரிந்தியர்-12:10
உண்மையான ஒரு தேவ பிள்ளை தன்னுடைய பெலவீனத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருப்பானானால், அந்த பெலவீனத்தை மேன்மை பாராட்டுகிறான். அப்படிப்பட்டவன் பலமுள்ளவனாகக் காணப்பட முடியாது. நாம் அறிந்த ஓர் அருமையான தேவ ஊழியர் பாஸ்டர் மோசஸ் ராஜசேகர். அவர் சரீரமானது சொல்லொன்னா பெலவீனத்தால் தாக்கப்பட்டிருந்தது. சிறுநீரகம் செயலிழந்ததினால் (kidney failure) அடிக்கடி இரத்த மாற்றுச் சிகிச்சை செய்து கொள்வார். உணவு சாப்பிட்டால் உடனே சத்தி எடுத்துவிடுவார். அவரை தூக்கிக் கொண்டு போவார்கள். ஆனால் அந்த தேவமனிதனின் வார்த்தைகளைக் கவனியுங்கள்
சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி
சவால்… சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே
தொடர்ந்து பாடுகிறார் பாஸ்டர் மோசஸ் ராஜசேகர்; அவருடன் சேர்ந்து நாமும் பாடுவோமா?
நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன்
பவுல் சொன்னது போல, நான் பெலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன் என்று சொல்லும் போது ஒரு காரியம் நடக்கும் – அளவில்லாத தேவ கிருபை நம்மை மூடும். அப்பொழுது, சோர்வுகள் பெவீனங்கள் நம்மைத் தாக்கும் போது தேவ கிருபை நம்மை நிலை நிறுத்தும். பெலன் கொடுக்கும். வழிநடத்தும். எனவே நான் கிறிஸ்துவுக்குள் பலமுள்ளவன் என்று அறிக்கை செய்யுங்கள். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments