உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளாக இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். எரேமியா-39:18
உன்னை நிச்சயமாக விடுவிப்பேன். வாசிக்க அல்லது கேட்க மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கிற ஒரு வார்த்தையாகக் காணப்படுகிறதல்லவா? உண்மையாக விடுவிப்பாரா? அப்படியானால், யாரை விடுவிப்பார் என்கிற கேள்வியோடு தொடங்குவோம். அப்பொழுது நமக்குப் பதில் கிடைக்குமல்லவா?
அதேவசனத்தில் நீ என்னை நம்பினபடியால், இன்னும் ஒருவகையில் கூறுவேனேயாகில், என்னை முற்றுமாய் சார்ந்திருக்கிறவனையே நான் விடுவிப்பேன். தாவீது “நீர் என் கேடகமும் என் கோட்டையும் நான் நம்பி இருக்கிற துருகமும்”, என்று ஆண்டரை வர்ணிப்பதும் அவன் ஆண்டவரைச் சார்ந்திருப்பதையும் நாம் காணமுடியும். அவனுடைய மாமாவாகிய சவுலுக்குத் தாவீதைக் கொலை செய்வதே நோக்கம். அவ்வளவு பொறாமையும் எரிச்சலும் கொண்டு காணப்பட்டான். ஒரு நாள் தாவீது வசமாக மாட்டிக் கொண்டான். சவுலுடைய வீட்டில் தான் வாத்தியம் வாசிக்க போனபோது ஈட்டியும் கையுமாக நின்றான். தாவீது வாத்தியக் கருவியை வாசித்துக் கொண்டிருக்கும் போது, தொலைந்து போ. நீ இருக்கும் வரை நான் நிம்மதியாக வாழமுடியாது என்பது போல நினைத்து அம்பை எய்தான். கர்த்தரோ அவனைப் பாதுகாத்தார். ஒன்றா இரண்டா எத்தனை முறை கர்த்தர் தாவீதைப் பாதுகாத்தார் தெரியுமா?
அதுபோல உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் சத்துரு எய்த எத்தனையோ அம்புகளில் இருந்து பாதுகாத்தார் தெரியுமா. நன்றியுள்ள இருதயத்தோடு ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். நன்றியறிதல் உள்ளவர்களாக வாழப் பிரயாசப்படுங்கள். தொடர்ந்தும் உங்களைக் காப்பார். விடுவிப்பார். இது நிச்சயம். இதுவே சத்தியம்! ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments