கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நீதிமொழிகள்-14:27
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுவதை நாம் தெளிவுறக் காணலாம். மரணம் பொதுவானது என்று அநேகர் விமர்சிப்பது உண்டு . சிலர் நரகத்தைப் பார்த்தது யார் ? சொர்க்கத்தைப் பார்த்தது யார் ? என்று பரியாச கேள்விகளைக் கேட்பார்கள்.
மரணத்தை வேதம் மூன்று வகையாக எடுத்துரைக்கிறது. ஒன்று சரீர மரணம்; இரண்டாவதாக ஆவிக்குரிய மரணம்; மூன்றாவது ஆவிக்குரிய சரீரத்துக்குரிய மரணம். ஆபேல் சரீர மரணத்தை அடைந்தான். ஆதாம் ஏவாள் இருவரும் ஆவிக்குரிய மரணமாகிய ஆத்தும மரணத்தை அடைந்தார்கள். மூன்றாவது நோவாவின் காலத்தில் ஜனங்கள் ஆவிக்குரிய சரீரத்துக்குரிய மரணத்தை அடைந்தார்கள்.
ஆவிக்குரிய சரீரத்துக்குரிய மரணமானது நம்மை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். இதிலிருந்து தப்ப வேண்டுமானால், அம்மனிதன் கர்த்தருக்குப் பயந்து, அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க ஆரம்பிக்கும் போது , மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். எனவேதான் “நமக்களிக்கப்படும் கிருபை வரமோ நித்திய ஜீவன்” என்று இயேசு சொன்னார். எனவே மரணத்துக்குத் தப்பி ஜீவனுக்குள் பிரவேசிக்க, பாவங்களை விட்டுக் கர்த்தருக்குப் பயப்படும்படி அவர் வார்த்தைக்குச் செவி கொடுப்போம். அல்லேலூயா! ஆமென்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments