நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கக்கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா-29:11
அநேகருடைய எதிர்பார்ப்புகள் தேங்கிய நிலையில் நிறைவேறாத ஆசைகளாக, கனவாக, கேள்விகளோடு காணப்படுகின்றன. உதாரணமாக, நன்றாகக் கீழ்ப்படிந்து படித்த பிள்ளைகள் நிலை தடுமாறிக் காணப்படுவதை நாம் பார்க்கிறோம்.
ஒரு வாலிபன் நன்றாகப் படித்தான். என்ன நடந்தது என்பதை எவரும் அறியார். திடீர் எனப் படிப்பதை வெறுத்து, நகங்களையும், தலைமயிரையும் நீளமாக வளர்த்துத், தனிமையில் யாருடனும் பேசாமல் இருக்கிறான். அவனுக்காக ஜெபிக்கும்படி அவனது பெற்றோர் கேட்டுக் கொண்டார்கள். சில இடங்களில், கணவன் அல்லது மனைவியின் வாழ்க்கை மாறியிருப்பதால், மறுபடியும் ஒரு சீர்திருத்தம் வருமா? தொழில் செய்யும் இடங்களில் அனாவசியமான நெருக்கங்களுக்கு முகம் கொடுப்போர் இதில் இருந்து ஒரு விடிவு வராதா? என்ற ஏக்கப் பெருமூச்சோடு இருக்கும் பெற்றோரே! கணவன்மாரே! மனைவிமாரே! உங்கள் கண்ணீரைக் கண்ட தேவன், நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவைக் கொடுப்பார். பிள்ளைகள் குடும்பத்திலும், தேசத்திலும், சபைகளிலும் சீர்திருத்தப்பட்டவர்களாக மட்டுமல்ல, அநேகரைச் சீர்திருத்துகிறவர்களாக மாறப்போகிறார்கள்.
ஒரு போதகருடைய ஒரே மகனைக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்து வளர்த்தார்கள். ஆனால் அவரோ குடித்து, வெறித்து உலகத்தாரோடு இசை, நாடகங்களில் கலந்து கொள்வதுமாக இருந்தார். அவருடைய தாய் அவருடைய அழைப்பை நினைத்து, அழுது அழுது ஜெபித்தார்கள். அந்த ஜெபம் கேட்கப்பட்டது. இன்று அவர் அநேக ஆயிரங்களுக்குத் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு செல்லும் ஒரு கருவியாக் காணப்படுகிறார்
அந்தப் போதகருடைய தாயாரின் ஜெபத்தைக் கேட்ட தேவன் உங்கள் ஜெபத்தையும் கேட்கிறவர். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு அவர் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகள் பெரியது. விசுவாசியுங்கள், வெற்றி நடைபோடுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
தேவன் நம்முடைய பெரிய ஏமாற்றங்களையும் பயன்படுத்தி அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசத்தில் வளரச் செய்வார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments