Site icon Bethel Tamil Christian Church Switzerland

ஏற்றகாலத்தில் அறுப்போம்

நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.  கலாத்தியர்-6:9

தளர்ச்சி எப்பொழுது வருகிறது என்று முதலில் நாம் பார்ப்போமேயானால், வேதம் சொல்வதைக் கவனியுங்கள்.”பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்” எசேக்கியேல்-7:27

திடீர் என ஏற்படும் சம்பவங்கள் நமக்குப் பயத்தையும், நடுக்கத்தையும் கொடுக்கும். உதாரணமாக பணிநீக்கம் செய்து விட்டார்கள் என்றால், இனி என்ன செய்யப் போகிறோம்? வீட்டு வாடகை எப்படிக் கட்டுவது? பிள்ளைகளின் படிப்புச் செலவு, குடும்பத் தேவை இவை அனைத்தையும் நினைக்கும் போது, கால்கள் தள்ளாட ஆரம்பிக்கும். யோசனை அதிகமாகும்போது, புத்தி சுயாதீனமடைவாரும் உண்டு. இன்று எங்குப் பார்த்தாலும், நம் காதுகளில் விழும் செய்தி – அங்கே 800 பேருக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்ற பதபதக்கும் செய்தி. இதைப்போன்ற செய்திகள் இன்று சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆனால், நாம் எலியாவைக் கர்த்தர் காகங்களைக் கொண்டு போஷித்தார் என்று கூறுவோம். ஆனால் என்னை அவர் போஷிப்பார், கைவிடாதிருப்பார் என்கிற நம்பிக்கை அற்றவர்களாகவே காணப்படுகிறோம்.

ஐம்பத்தெட்டு வயதுடையவரின் சாட்சியைக் கேட்டேன். அதாவது அவர் தன்னுடைய வேலையை இழந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாது, ஆனால் என்னை அழைத்தவர் கைவிடமாட்டார் என்கிற மன உறுதியோடு ஜெபித்தாராம். எதிர் பாராத விதமாக, அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது என்று சாட்சி பகிர்ந்தார்.

ஆம் பிரியமானவர்களே! இப்படிப் பட்ட நேரங்களில் நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். இது உண்மை.  ஆமென்.


விசுவாசத்துடன் எடுக்கும் ஒவ்வொரு அடியும், வளர்ச்சிக்கான மிகப்பெரிய அடியாகும்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version