அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது சங்கீதம்-54:7
நெருக்கங்கள் போராட்டங்கள் வரும்போது நாம் மனிதர்களின் உதவியை நாடி ஓடுகிறோம். நம்மை விடுவிக்க வந்தவர்களே போராட்டக்காரர்களாக மாறின கதைகள் எத்தனை? ஆனால், ஒரு மனிதன் தேவனைச் சார்ந்து அவரையே நம்பி இருப்பானானால், அவன் விடுவிக்கப்படுவதும் சத்துருவின் சரிக்கட்டுதலைக் காண்பதும் நிச்சயம்.
2-நாளாகமம்-20:1-3 ஐ வாசித்துப்பாருங்கள்
1. இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.
2. சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
3. அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்
பார்த்தீர்களா! மோவாபியரும் அம்மோனியரும் அப்புறத்திலுள்ள மனுஷரும் யோசபாத்துக்கு விரோதமக வந்துவிட்டார்கள். அவன் பயந்து போனான். ஆனால், அவன் ஒன்றை அறிந்திருந்தான் – நான் ஆராதிப்பவர் சர்வ வல்லவர். யுத்தவீரன். ஒருவரும் அவரை மேற் கொள்ள முடியாது என்பதை அறிந்து விசுவாசித்தபடியால், உபவாசித்து கர்த்தரை துதித்து
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று விண்ணப்பித்தான். 2-நாளாகமம்-20:12.
கர்த்தர் என்ன செய்தார்? ஒருமுகமாக யோசபாத்துக்கு விரோதமாக வந்தவர்களை ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பட்டயத்தை எழும்பச் செய்தார். தம்மை நம்பின தமது பிள்ளைக்கு வெற்றியைக் கொடுத்தார்.
ஆம் தேவ பிள்ளைகளே, உனக்கு விரோதமாக உலகமே எதிர்த்து வந்தாலும் கலங்காதே. யோசபாத்தின் தேவன் உன் தேவன். உனக்கு வெற்றியைக் கொடுப்பார். உன்னை எல்லா சத்துருக்களின் கைக்கும் நீக்கி விடுதலையாக்குவார். உனக்கு விரோதமாகச் சத்துரு வியாதிகளை அல்லது பிரச்சனைகளை கொண்டுவருகிறானா? கர்த்தரையும் அவரது வல்லமையையும் விசுவாசித்து அவரை துதி. வெற்றி நிச்சயம்! விடுதலை சத்தியம்! ஆமென்.
ஒன்றுமில்லை என்று தோன்றும் போதும் தேவன் நம்பிக்கையைத் தருகின்றார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments