சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம்-34:10
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. கர்த்தர் நமக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்னவென்றால், உனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. அதாவது, உன் எண்ணெய்யும், மாப்பிசைகிற தொட்டியும் ஆசீர்வதிக்கப்படும். மட்டுமல்லாது சுக வாழ்வு துளிர்க்கும்.
பாருங்கள், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் அவர்களுடைய பாதரட்சையும், வஸ்திரமும் கிழிந்து போகவில்லையாம். அவ்விதமாகத் தேவன் அவர்களை வனாந்தரத்திலே வழிநடத்தினார். அப்படியே உங்களையும் வழி நடத்த தேவன் உண்மையுள்ளவர்.
சாது சுந்தர்சிங் கனியன் என்ற இடத்தில் பிரசங்கிக்க முயன்றபோது மக்கள் மீண்டும், மீண்டும் தடை செய்ததால், ஒரு தனித்த இடத்திற்குச் சென்று, பசியாலும் , வருத்தத்தாலும் மரத்தினடியில் படுத்து உறங்கினார். நள்ளிரவில் ஒருவர் தட்டி எழுப்பி “எழுந்து புசி” என்று கூறினார். அங்கே அவருக்கு அருகில் சாப்பிட உணவும் குடிக்கத் தண்ணீரும் வைத்துக் கொண்டு இரண்டுபேர் நின்றனர். அவர் மீது இரக்கம் கொண்ட கிராமவாசிகளாயிருக்கலாம் என்று எண்ணி, நன்றியுடன் அதனை உட்கொண்டார். திருப்தி அடைந்த பின்பு அந்த மனிதர்களுடன் பேசுவதற்காக அவர்களை நோக்கினார். ஆனால் அவர்கள் மறைந்துவிட்டனர்.
இதே தேவன் இன்றும் உங்களைப் போஷிக்கவும், குறைவின்றி நடத்தவும் உண்மையுள்ளவர். ஆமென்.
வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் தேவனுடைய உதவிக்கும், அவருடைய பெலத்திற்கும் காத்திருக்க நமக்குக் கற்றுத் தருகின்றன.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments