Site icon Bethel Tamil Christian Church Switzerland

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.  ஆதியாகமம்-12:2

பிரியமானவர்களே! ஆசீர்வதிப்பேன் என்பதற்கும், ஆசீர்வாதமாக இருப்பாய் என்பதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. ஆபிரகாமுக்கு இந்த இரண்டு ஆசீர்வாதங்களையும் தேவன் தருவதாக வாக்கு பண்ணினார்.

இன்று இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற வாஞ்சிக்கிறீர்களா? அப்படியானால் , என்ன செய்ய வேண்டும்? கர்த்தருடைய சத்தத்திற்குச் செவி கொடுக்க வேண்டும். “புறப்பட்டு வா” “புறப்பட்டுப் போ”. தேவ சித்தத்திற்கும், அவர் சத்தத்திற்கும் செவி கொடுப்பதைக் காண்கிறோம்.

பாருங்கள், சிலருடைய பெயர் உயர்ந்து கொண்டே போகும். திரைத்துறை(Cinema) நட்சத்திரங்களைப் பாருங்கள். பணமும், புகழும் ஒரு காலக் கட்டத்திற்குப் பெருகிக் கொண்டே வரும். சிலரைக் கவனித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் இழந்து, வாழ்வா? சாவா? என்ற நிலையில் காணப்படுகிறார்கள். சில பெற்றோர் சேர்த்து வைப்பார்கள்; பிள்ளைகள் அல்லது மருமக்கள் வந்து ஊதாரித்தனமாகச் செலவழிப்பார்கள். ஆனால் கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படியும் ஒரு தேவப் பிள்ளையின் ஆசீர்வாதம் வீணாகாது. அது பாதுகாக்கப்படும். எனவே, கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம்.  ஆமென்.


நம்முடைய பாரங்களை ஆசீர்வாதங்களாக மாற்ற வல்லவர் நம் தேவன்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version