நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். யாத்திராகமம்-15-26
வியாதிகள் வரும்போது, வைத்தியர்களைத் தேடி ஓடுகிறோம். இது தவறு என்றோ, மருந்தெடுப்பது பாவம் என்றோ, நான் கூறவில்லை. வேதத்தில் ஒரு ஸ்திரீ, தன் வியாதி நீங்க ஊரெல்லாம் ஓடி, ஓடி வைத்தியர்களை நாடி, ஆஸ்தி முழுவதையும் செலவழித்து, ஒரு நன்மையும் காணாமல் கடைசியாக இயேசுவிடம் வந்து சுகம் பெற்றுக்கொண்டதை நாம் வாசிக்கிறோம்.
பிரியமான தேவப் பிள்ளையே! ஒரு முறை ஒரு வாலிபன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும், இன்னும் ஒரு சகோதரனும், அந்த வாலிபனுடைய தாயாரும் பிரதான வைத்தியரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அந்த வைத்தியர் எங்களை அன்பாக வரவேற்று, வாலிபனுடைய நிலையை எங்களிடம் விவரித்துக் காட்டினார். அதாவது ஒரு வேளை இப்படியே நித்திரையாகவே படுத்த வண்ணம் இருப்பான். அல்லது அவன் கண்கள் திறக்கப்பட்டாலும் எழுந்திருக்க மாட்டான் என்று கூறிய போது, அந்த வாலிபனுடைய தாயார் “நான் வணங்குகிற இயேசு அவன் கண்களைத் திறக்கவும், எழுந்திருக்கவும் செய்வார்” என்று விசுவாச அறிக்கையிட்டார்கள். அப்படியே, தேவன் அந்த விசுவாச அறிக்கையைக் கவனித்தார். அவர்களைக் கனப்படுத்தி, அந்த வாலிபனை எழுந்திருக்கச் செய்தார்.
நம்முடைய நம்பிக்கை வைத்தியரின் ஆய்வறிக்கையில் இல்லை, “தலைமுறை தலைமுறையாக” நமக்கு அடைக்கலமாக இருக்கின்ற தேவன் மீதே இருக்கின்றது. அந்தத் தேவன், இன்று எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும், நானே உன் பரிகாரி, என்றுரைத்துச் சுகம் கொடுக்கப் போகிறார். ஆமென். அல்லேலூயா
தேவன் மேல் நம்பிக்கை வைக்கும்பொழுது நம்முடைய நிலையற்ற வாழ்வின் நிஜத்தினை எதிர்கொள்வது இலகுவாகிறது.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments