இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம்-121:4
ஐரோப்பாவில் பிறந்து, ஆசியாவில் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்ற ஒரே வாஞ்சையோடு, தான் நேசித்த பெண்ணையும் விட்டு, சீனா நோக்கித் தேவ சேவைக்காகப் புறப்பட்டுப் போன வாலிபன் ஹட்சன் டெய்லர். அவர் தங்குவதற்காக ஒரு வீடு தேடி அலைந்தார் . கிடைக்காதபோது, மனச்சோர்வுற்றார்.
அவ்வேளை, ஒருவர் மூலமாக ஒரு வீடு இருப்பதாக அவருக்குச் செய்தி வந்தது. சென்று பார்த்தால் அது ஒரு பழைய வீடு. அந்த வீடு மரப்பலகையினால் அமைக்கப்பட்டிருந்தது. அதைவிட, அந்த வீடு அமைந்திருந்த இடமானது யுத்தப் பிரதேசமாகக் காணப்பட்டது. அதாவது, சீன ராணுவத்திற்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே யுத்தம் நடக்கும் இடமாகக் காணப்பட்டது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனாலும், இதை விட்டால் வேறு வழியில்லை என்னும் நிலையில் சம்மதித்தார்.
தன்னுடைய உடைமைகளோடு, வீட்டில் குடியமர்த்தப்பட்டார். ஒரு நாள் காலை பெரிய வெடிச் சத்தம் கேட்டு, தனது உடைகளை மாற்றிக்கொண்டு, மேல் மாடிக்குச் சென்று பார்த்தால், பக்கத்தில் இருக்கும் வீடுகள் தீப்பற்றி எரிவதைக் கண்டு, “ஆண்டவரே! நான் என்ன செய்வேன்?’ எனது வீடும் தீப்பற்றி எரியப்போகிறதே. என் உடைமைகளை எடுத்துக் கொண்டு போகக் கூடிய சூழ்நிலை இல்லையே” என்று தேவனை நோக்கிக் கதறினார். நடந்தது என்ன தெரியுமா? எதிர் பாராத பெரும் மழைபொழிந்தது. வீடு பாதுகாக்கப்பட்டது.
எத்தனை அன்பு! எத்தனை ஆச்சரியம்! அவர் இன்று உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம் உன்னைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை விசுவாசியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
தேவனுடைய வழியிலே தேவனுக்குச் சித்தமானதைச் செய்கையில் அனைத்தையும் அவரே தந்தருளுவார் – ஹட்சன் டெய்லர்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments