இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக. உபாகமம்-29:9
இன்று இளைஞர் யுவதிகள் வேலை தேடுகிறார்கள். படிக்க முயற்சி எடுக்கிறார்கள். சொந்தத் தொழில் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் எல்லாமே தோல்வியாகக் காணப்படுகிறது என்ற அழுகையின் குரலோடு காணப்படுகிறார்கள். குடும்பத்திலும் அநேக தடைகள். ஒன்றுமே கை கூடவில்லை. நான் ஜெபிக்கிறேன்; வேதம் வாசிக்கிறேன்; ஆனால் எனக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்போர் எத்தனை பேர்?
அருமை நண்பர்களே! வேதம் வாசிக்கலாம்; ஜெபிக்கலாம்; நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவன் தாம் விரும்பும் ஒவ்வொன்றையும் தெளிவாக நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை வாசிப்பதோடு நின்றுவிடாமல், கைக் கொள்ள வேண்டும். வாசிப்பது இலகுவானது. ஆனால் கடைப்பிடிப்பது கடினமானது. எனவே ஒரு நல்ல தீர்மானம் செய்து, வேதத்தை வாசித்துக் கைக்கொள்ள முயற்சியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் தேவ கரம் இருப்பதைக் காண்பீர்கள்.
சங்கீதம்-1:3 ஐ வாசித்துப்பாருங்கள். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
தேவனுடைய வசனங்கள் சிறப்பான இடத்தில் அதாவது நமது இருதயங்களில் பாதுகாத்து வைக்கப்பட தேவன் நமக்கு உதவி செய்ய நான் ஜெபிக்கிறேன்.ஆமென்.
வேதத்தை கவனமாய் வாசித்து ஜெபத்துடன் தியானியுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments