அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே சங்கீதம்-77:14
நம்முடைய தேவனுக்கு, வேதத்தில் அநேக பெயர்கள் உண்டு. அதிலே ஒன்று, அதிசயமானவர். பக்தன் யோபு சொல்வதைக் கவனியுங்கள் – “அவர் ஆராய்ந்து முடியாத, எண்ணிமுடியாத அதிசயங்களைச் செய்கிறார்” என்று கூறுகிறார்.
ஆம், பிரியமானவர்களே! இயேசு அற்புதங்களைச் செய்த போது, யூதர் அதிசயப்பட்டார்கள். காரணம், இதுவரை கண்டிராத அற்புதங்களைக் கண்ட போது அவர்கள் அப்படி மொழிந்தார்கள்.
ஒரு முறை, ஒரு கர்த்தருடைய தாசனிடத்தில், மார்பகத்தில் புற்று நோயால் தாக்கப்பட்ட ஒரு சகோதரியை அழைத்து வந்தார்கள். போதகர் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி ஜெபித்தார். ஒரு வசனத்தை எழுதிக் கொடுத்து, ஜெபிக்கும்படி சொன்னார். நடந்தது என்ன? விசுவாசம் ஜெயம் கொண்டது. கர்த்தர் சுகம் கொடுத்தார். காரணம், அவர் அதிசயம் செய்கிற தேவன். அவர் நம் தேவன். ஆமென். அல்லேலூயா
அற்புதங்களை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் இந்த பூமியிலிருந்தபோது, அநேக அற்புதங்களை செய்து ஜனங்களுடைய வாழ்வில் ஒரு பரிபூரணத்தை கொண்டுவந்தீரே அதுபோல என் வாழ்விலும் ஒரு அற்புதத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என்பதை நினைத்தருளும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments