நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம்-6:8
எங்களுடைய வீட்டில் ஓர் ஊழியக்காரர் வந்து தங்கி இருந்தார். அவர் எப்பொழுதும், அதாவது படுத்திருக்கும் போதும் கூட, கிருபை கிருபை என்று கூறிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் தேவ கிருபையை மிகவும் நன்றாக அனுபவித்தவர்.
தேவன் மோசேயினிடத்தில் என் கிருபை உனக்குப் போதும் என்றார். பவுலினிடத்தில் கிருபை வேண்டுமா? அல்லது முள் அகலவேண்டுமா? என்றார். பவுலோ கிருபை போதும் என்றார். பிரியமானவர்களே! கிருபை நம்மை வெற்றி சிறக்கப்பண்ணும்.
ஒரு குடும்பத்தாருக்கு பிறந்த ஆண் பிள்ளையால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். நாங்கள் ஜெபித்தோம். அந்தப் பிள்ளையின் இடுப்பு பெலன் கொண்டது. ஜெபிக்கும் போதே கால்கள் அசைவதைக் கண்டேன். இன்று நடக்கிறான்! காரணம் தேவ கிருபை அவனைப் பெலப்படுத்தினது.
ஆம் பிரியமானவர்களே! இந்தக் கிருபை உங்கள் வாழ்விலும் அற்புதம் செய்யும். எனவே கிருபையைக் காலை தோறும் வாஞ்சியுங்கள். ஆமென்.
தேவனுடைய கிருபையை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம், வெற்றியோ தோல்வியோ கிருபையை வெளிப்டுத்திக் காண்பிப்பதை நமது சிலாக்கியமாகவும் அழைப்பாகவும் கொள்ள வேண்டும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments