கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான். II-இராஜாக்கள்-10:10
ஊழியக்காரன் கர்த்தருடைய வாய் என்று வேதத்தில் வாசிக்கிறோம். பிரியமானவர்களே! “தேவன் தம்முடைய ஜனங்களை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து, அந்த வார்த்தைகளைச் சொல்லி, ஆசீர்வதிக்க வேண்டும்” என்று ஆரோனுக்குக் கட்டளையிட்டதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். எனவேதான், ஆண்டவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்கத்தக்கதாக ஊழியர்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒருமுறை ஒரு போதகரிடத்தில் ஜெபிக்க ஒரு குடும்பத்தார் வந்தார்கள். போதகர் ஜெபித்துவிட்டு, “கர்த்தர் உங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கப் போகிறார்” என்று கூறினார். உடனே அவர்கள் “பாஸ்டர் எனக்குக் கர்ப்பப்பை நீக்கப்பட்டுவிட்டது. எனவே, குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை” என்று கூறிவிட்டுப் போனார்களாம். சில மாதங்களுக்குப் பின், அந்த ஆலயத்தின் கன்வென்ஷன் நடத்த ஏற்பாடுகள் செய்த போது, அதே பாஸ்டரை செய்தி கொடுக்கும்படி அழைத்தார்கள். இவர் எப்படிப் போக முடியும்? குறிப்பிட்ட குடும்பத்தார் வருவார்கள். அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எனவே, தான் வரமாட்டேன் என்று சொன்னார்.
தலைமை பாஸ்டர் “நீங்கள் போய் வாருங்கள்” என்று கூறினபோது, சரி என்று போனாராம். போகும் போது, “ஆண்டவரே! அந்தக் குடும்பத்தார் இன்று நடக்கும் ஆராதனைக்கு வரக்கூடாது” என்று ஜெபம் பண்ணிவிட்டுப் போனாராம். ஆராதனையில் கலந்துகொண்டார். ஆராதனை முடிந்தது. ஒரு குடும்பத்தார் வேகமாக அவரை நோக்கி வருவதைக் கண்டார். தயக்கமுற்ற அவர், செய்வதறியாது திகைத்து நின்றார். அவருடைய மனம் பக்; பக் என்று அடித்தது. அவர்கள் வந்து, பாஸ்டருக்கு ஸ்தோத்திரம் என்றார்கள். “எங்களுக்கு நீங்கள் சொன்ன வார்த்தையின்படி, குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள். கர்ப்பப்பை எடுக்கப்பட்ட உங்களுக்குக் கர்ப்பப்பை உண்டானதும், குழந்தைப் பாக்கியம் உண்டானதும் தெய்வச் செயல்” என்று சொன்னார்களாம்.
ஆம், இன்றும் தேவன் தம்முடைய ஊழியக்காரரைக் கனப்படுத்துகிறார். அவர்களுடைய வார்த்தையை மேன்மைப்படுத்துகிறார். எனவே, எபிரேயர்-13:17 இல் உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே என்று வாசிக்கிறோம். சிந்தித்துச் செயல்படுங்கள். கர்த்தர் உஙகளை ஆசீர்வதிப்பார். ஆமென்.
நாம் தேவனுக்கு பணிசெய்யும் பொழுது பெலத்தின் மேல் பெலன் அடைகிறோம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments