Site icon Bethel Tamil Christian Church Switzerland

பாதுகாக்கும் தேவன்

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.  யாத்திராகமம்-23:20

இன்று வாகனங்களிலே நாம் பயணம் செய்கிறோம். பிள்ளைகள் பயணிக்கிறார்கள். எத்தனையோ விபத்துகள் நேரிட இருந்தபோதும், நம்மை ஒரு சக்தி காத்ததாக எண்ணுகிறோம். ஆனால் உண்மையாக நம்மைக் காத்தது யார்? உண்மையாக இதை நாம் உணர்ந்திருப்போமானால், வாழ்நாள் எல்லாம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு முறை சாது சுந்தர் சிங் ஒரு கிராமத்தில் சுவிசேஷம் சொல்லிவிட்டு அக்கரைக்குப் போகக் கரைக்கு வந்தபோது, கடைசிப் படகு சென்றுவிட்டதைக் கண்டு மிகவும் சோர்வுற்றார். தற்போது நான் என்ன செய்வேன்? மறுநாள் காலைவரை என்ன செய்வது? இரவை எங்கே கழிப்பது? பல கேள்விகள்! அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி. துஷ்ட மிருகங்களின் ஆரவாரமும், வண்டுகளின் ரீங்கார ஒலியும் ஓங்கி வளர்ந்த வன மரங்களாலும், காண்போரை அச்சமுறச் செய்யும் வனப்புடையது. தேவனே இன்றோடு என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தார்.

திடீர் என அக்கரையில் நெருப்பு மூட்டப்பட்டிருப்பதையும், ஒரு மனிதன் தண்ணீர் மேல் நடந்து வருவதையும் கண்டார். அந்த மனிதன் சாதுவைப்பார்த்து, பயப்படாதே நான் உன்னை அக்கரைக்குக் கொண்டு போய் விடுகிறேன். என் தோள்மீது ஏறிக் கொள் என்று சொல்லி, அவரைச் சுமந்து கொண்டு அக்கரையில் கீழே இறக்கிவிட்டான். சாது அவருக்கு நன்றி சொல்லத் திரும்பியபோது அம்மனிதனைக் காணாமல், ஓ நம்மைக் காப்பாற்றும் படியாகத் தேவன் அனுப்பிய தூதன் என்றுணர்ந்தார்.

அவர் நமக்குப் பணிவிடை செய்யத் தூதர்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார். அவர் நம்மை இதுவரை காத்தார்; இனிமேலும் காப்பார்! ஆமென்.


எங்கள் அன்பின் தந்தையே, எங்கள் வாழ்க்கைப் பாதையில், எங்கள் பயணத்தைப் பாதுகாத்து, எங்களை பத்திரமாக வைத்திருக்கிறதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version