பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான் வெளிப்படுத்தல்-22:1
அமேசான் நதியானது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் நதி. அமேசான் நதி, கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும். உலகில் கூடுதலான நாகரீகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன என்று கூறுவர். நதிகள் காணப்படும் இடங்களில் செழிப்பைக் காணலாம். பச்சை பச்சையாக இலைகளும், மரங்களும், அவற்றில் பழங்களும், பூக்களும், மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகக் காணப்படும். அவற்றிற்குச் செழிப்பைக் கொடுப்பது அந்த நதியின் தண்ணீரே!
இன்று உங்களுடைய வாழ்வின் செழிப்புக்கும், பிள்ளைகளின் நல்வாழ்விற்கும், குடும்ப அமைதிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அதுமட்டுமல்ல ஆவிக்குரிய செழிப்பிற்கும் ஒரு நதியின் நீர் அவசியமாகக் காணப்படுகிறது. இந்த நதி ஜீவத்தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் பாயும் இடமெல்லாம் ஆரோக்கியம் சமாதானம் சந்தோஷம். எனவேதான் இயேசு சொன்னார் அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீர் உள்ள நதிகள் புறப்பட்டு ஓடும். உடனே சமாரியா ஸ்திரி அதை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
இன்று உங்கள் வாழ்விலும் இதை வாஞ்சிக்கிறீர்களா? இதோ தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது. பானம் பண்ண ஆயத்தமாக இருப்பீர்களேயானால், வாஞ்சையோடு “ஆண்டவரே எனக்குத் தாரும்” என்று கேளுங்கள். நிறைவாகத் தந்து உங்களை நிரப்புவதைக் காணலாம். நிறைவான சந்தோஷம், சமாதானம், விடுதலை மற்றும் சுகம் உங்கள் வாழ்வில் காணப்படுவதை நீங்கள் கண்டு உணர்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென். அல்லேலூயா
ஜீவ தண்ணீருக்கு இயேசு ஒருவரே மூல காரணமாக உள்ளார்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments