நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா-41:10
நான் உன்னுடனே இருக்கிறேன். இந்த வார்த்தைக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது! காரணம் உலகத்தில் தோன்றின அத்தனை உறவுகளும், ஒருநாள் நம்மைவிட்டகன்று போய்விடும். இந்த வார்த்தையைச் சொல்லும் நம்முடைய தேவன் யார்? இதோ மரித்தேன் சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன் என்றவர். எதுவரையிலும் நம்மோடு இருப்பேன் என்றார் தெரியுமா? இந்த உலகத்தின் முடிவு பரியந்தம். அவர் இருக்கும் போது நமக்கென்ன கவலை?
வேதத்திலே ஒரு வாலிபனைப் பற்றி வாசிக்கிறோம். அவன் பெயர் கிதியோன். அவன் ஒரு நாள் கோதுமையைப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் காதுகளில் ஒரு சத்தம் விழுந்தது. அதாவது பராக்கிரமசாலியே மீதியானியருக்கு விரோதமாகப் போ நான் உன்னுடனே இருக்கிறேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
அன்று தேவன் கிதியோனோடு இருந்து, தமது வார்த்தையை உறுதிப்படுத்தி ஜெயத்தைக் கொடுத்தது போல, இன்று உங்கள் வாழ்விலும் ஜெயத்தைக் கொடுக்க உண்மையுள்ளவராகவே இருக்கிறார். விசுவாசியுங்கள். ஜெயம் உங்களுடையதே! ஆமென்.
கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments