அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர்-8:26
நாம் ஆவியிலே சோர்ந்து போகும் போது மனச்சோர்வுற்றுக் காணப்படுகிறோம். அவ்வேளையில் நமக்கு எதிர்பாராத விதமாக, நமக்குள் இருந்து ஒரு அபாரசக்தி கிரியை செய்வதைச் சிலவேளை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்குமல்லவா? அப்படியானால் அந்தப் பெலன் எங்கிருந்து வருகிறது என்பதைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன்
ஒரு முறை தவளை ஒன்று பால் சட்டியில் தவறி விழுந்து விட்டது. உள்ளே பார்த்தால் அதற்குப் பெரும் வியப்பை அளிக்கும் விதமாக, ஒரு தவளை செத்து மிதந்து கொண்டிருந்தது. இன்னுமொரு தவளை அனுங்கிக்கொண்டு, இந்தத் தவளையைப்பார்த்து, “அது என் மனைவி. இவள் மரித்துப் போனாள். நானும் இன்னும் சிறிது நேரத்தில் மரித்துப் போய்விடுவேன். நீயும் செத்து எங்களோடு வந்து சேர்ந்துவிடு” என்றது.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே ஒரு கலக்கம் வந்த போதும், தனக்குள் ஒரு பெலன் கிரியை செய்கிறதை உணர்ந்தது. “இப்போது வேண்டுமானால் நான் வெளியில் போக முடியாமல் போகலாம். ஆனால் விரைவில் நான் இதிலிருந்து மீள்வேன்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே, வேகமாகத் தன் கைகளையும் கால்களையும் அடிக்க ஆரம்பித்தது. இப்பொழுது திரவ நிலையிலிருந்த பால் திண்ம நிலை அடைந்தது. அதாவது பால் தயிராக மாறினது. உடனே பால் சட்டியைவிட்டு வெளியே குதித்து உயிர்பிழைத்துக் கொண்டது.
ஆம் பிரியமானவர்களே! எத்தனையோ விதமாகச் சோர்வுகள் ஆவியிலும், ஆத்துமாவிலும், நம்மை அணுகிய போது, அவற்றை மேற் கொள்ள உதவி செய்தவர் ஆவியானவர். எனவே இந்தக் காலைவேளை ஒரு முறை அவருக்கு நன்றி சொல்வோமாக. அப்படியானால் ஒரு ஆமென் என்று பதிவிட்டு இதை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பித் தேவனை மகிமைப்படுத்துங்கள். ஆமென். அல்லேலூயா
வாழ்க்கைப் பிரச்சனைகள் உங்களைச் சோர்வுறச் செய்தால், தேவனில் பெலனைப் பெறுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments