நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். எண்ணாகமம்-35:13
இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரிக்கும் கானான் தேசத்திலே, ஆறு அடைக்கல பட்டணங்கள் அமைக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டிருந்தார். அந்த ஆறு பட்டணங்களின் நோக்கம், ஒருவன் யாதொருவனைக் கொலை செய்தால், கொலையாளி உயிர் தப்பிக்க இந்தப் பட்டணங்கள் அமைக்கப்படவேண்டும். குற்றவாளி தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும், அடைக்கலப் பட்டணத்திற்குப் போகாமல் வெளியே காணப்படும்பட்சத்தில் அவன் கொலைசெய்யப்படுவான்.
இன்று பாவத்தின் நிமித்தமாக, பிசாசு வியாதி கஷ்டங்கள் பிரச்சனைகள் என்று ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி, உங்கள் வாழ்க்கையை முடித்துவிட வேண்டும் என்று உங்கள் பின்னே ஓடி வருகிறான். இவனிடம் இருந்து தப்ப இன்று ஓர் அடைக்கலப் பட்டணம் 2000 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயேசு கிறிஸ்து என்னும் அடைக்கலப்பட்டணம்.
ஆம் பிரியமானவர்களே பாவத்தின் சம்பளம் மரணம். அதுமட்டுமா? வியாதி, கஷ்டங்கள், பிரச்சனைகள் இவற்றில் இருந்து மனிதனைக் காப்பாற்ற, பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை நமக்காக இந்த உலகத்தில் தந்தருளினார். இன்று விடுதலை பெற்று ஜீவன் தப்ப அடைக்கலப் பட்டணத்தின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. ஓடிவருவோருக்குப் புகலிடம் உண்டு. தாமதிக்க வேண்டாம். தாமதித்தால் நம்முடைய எதிராளியான பிசாசின் செயல்கள் அதிகரிக்கும்.
உபாகமம்-33:27 இல் சொல்லப்பட்டது போல அநாதி தேவனே உனக்கு அடைக்கலம். வா மகனே! வா மகளே! என்றழைக்கும் அன்பரின் சத்தத்திற்குச் செவி கொடுத்தால் ஆசீர்வாதம் விடுதலை இரண்டும் நிச்சயம். ஆமென்.
அன்புள்ள தகப்பனே, நீர் என் கன்மலையும் அடைக்கலமுமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments