Site icon Bethel Tamil Christian Church Switzerland

போதுமென்கிற மனம்

happy

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.  Iதீமோத்தேயு-6:6

எவ்வளவு இருந்தாலும் போதாது என்கிற திருப்தி அற்ற வாழ்வு வாழும் அநேகரை அன்றாடம் வாழ்வில் காணலாம்

ஒரு முறை ஒரு மனிதன் நான்கு கோடி பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டான் என்ற தகவலின்படி, காவல் துறையால் (Police) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டான். நீதிபதி குற்றவாளியைப் பார்த்து, “காலை உணவு உட்கொண்டாயா?” என்று கேட்டார். குற்றவாளி இல்லை என்று பதில் கூறிய போது, காவல் துறையினரைப் பார்த்து, “குற்றவாளிக்கு நான்கு இட்லி கொடுங்கள். நான் அரை மணி நேரத்தில் மறுபடியும் குற்றவாளியைச் சந்திக்கிறேன்” என்றவர், ஆசனத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

நீதிபதியின் உத்தரவைக் கேட்டுக் காவல் துறையினர் பிரமிப்படைந்த போதும், உத்தரவுக்கிணங்க நான்கு இட்லி வாங்கிக் கொடுத்தார்கள். அரை மணி நேரத்தின் பின் குற்றவாளி இருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, மூன்று இட்லியைச் சாப்பிட்டுவிட்டு கைகளைக் கழுவிவிட்டு அமர்ந்திருப்பதைக் கண்ட நீதிபதி, “ஏன் இந்த இட்லியைச் சாப்பிடவில்லை?” என்ற போது “என்னால் முடியாது! வயிறு நிரம்பிவிட்டது” என்றான். நீதிபதி சொன்னார். “தம்பி பார்த்தாயா? உன் வயிறு இவ்வளவு தான் என்று கூறும்போது, அதை ஏற்றுக் கொண்டு ஒன்றை வீசுகிறாயே, அது போல வாழ்க்கையில் போதும் என்ற மனம் இருக்குமேயானால் எத்தனை இன்பமானதாகும். மற்றவர்களும் திருப்தி அடைய முடியுமே” என்றார்.

ஆம் பிரியமானவர்களே! இருப்பதில் இன்பம் காண்போம். போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் என்ற இதயத்தை வாஞ்சிப்போம். ஆமென். அல்லேலூயா


உண்மையான மனநிறைவு இந்த உலகத்தில் உள்ள எதையும் சார்ந்தது அல்ல.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version